இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வந்தார். ருவாண்டா சென்ற பிரதமர் மோடி, நேற்று (25-07-2018) மாலை உகாண்டா வந்தார்.

உகாண்டா வந்த பிரதமரை, உகாண்டா அதிபர் யோவேரி ககுட்டா முசவேனி வரவேற்றார். பின்னர் அரசு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில் முக்கியமாக உகாண்டா நாட்டிற்கு ரூ 1,400 கோடி கடன் வழங்குதல் மற்றும் மின்சாரத்துறை வளர்ச்சிக்கு 750 பில்லியன் உகாண்டா ஷில்லிங்க்ஸ் வழங்குதல் ஆகிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.


இந்த சந்திப்பின் போது, இருநாட்டு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னர், இந்திய பிரதமர் மோடிக்கு, உகாண்டா நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் மரியாதை வழங்கப்பட்டது.



பிரதமர் மோடி, உகாண்டா பார்லிமெண்டில் உரையாற்றினார். அப்போது அவர், உகாண்டாவிற்கு என்னை அழைத்தது இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள கவுரவம். உகாண்டா வளங்கள் நிறைந்த நாடு. பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. உகாண்டாவில் வாழும் மக்களில் பலர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தற்போது இந்திய அரசால் இங்கு காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் காந்தி பரம்பரிய மையமும் அமைக்கப்படும்.




இந்தியாவில் சுதந்திர போராட்டம் துவக்கத்திற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. காந்தி வெறும் 21 ஆண்டுகள் மட்டும் ஆப்பிரிக்காவில் இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தையும் அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார். ஆப்பிரிக்க - ஆசிய உறவுக்கு இந்தியா தோள் கொடுக்கும். ஆப்பிரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது.


இந்தியாவின் டாக்டர்களும், இன்ஜினியர்களும் வெறும் வேலைவாய்ப்புக்காக மட்டும் ஆப்ரிக்கா வரவில்லை. இரு நாடுகளிடையேயான உறவை அவர் பலப்படுத்துகிறார்கள். ஆப்ரிக்க நாடுகளுடனான இந்தியாவின் உறவு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ஆப்ரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 54 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. ஆப்ரிக்காவின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments