கம்பாலா (Kampala) உகாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2002 கணக்கெடுப்பின் படி 1,208,544 வசிக்கிறார்கள்.
கம்பாலா நகரம், கம்பாலா மாகாணத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,190 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கம்பாலா, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியின் எல்லையை ஒட்டி உள்ளது. உகாண்டா நாட்டின் தேசிய மற்றும் வணிக தலைநகரம் கம்பாலா ஆகும். சிவப்பு ஓடுகளை கொண்ட வில்லாக்கள், மரங்கள், மலைகள் மற்றும் நவீன உயரமான கட்டிடங்களை கொண்ட நகரமாகும்.

நகரில் அமைந்துள்ள உகாண்டா தொல்பொருள் மாற்று அருங்காட்சியகத்தின் மூலம் நாட்டிலுள்ள பழங்குடி பாரம்பரியத்தை ஆராய்ந்து விரிவான விளக்கத்தை அளிக்கிறது. வணிக பொருட்கள் வாங்க ஓவினோ மற்றும் நகசேரோ சந்தைகள் உள்ளன. நகரின் தென் பகுதியில் உள்ள என்டெபி விகடோரியா ஏரியில் படகுகளில் மீன்பிடி தொழில் நடக்கிறது. .