உகாண்டா தலைநகர் கம்பாலாவில், அக்டோபர் 6-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 7 மணி அளவில், உகாண்டா தமிழ் சங்கம் பெருமையுடன் வழங்கும் மாபெரும் “காமெடி மற்றும் மெல்லிசை” விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி கம்பாலாவில் உள்ள லாபோனிற்றா அரங்கில் வைத்து (La Bonita Theatre, Kampala) நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பிரபல காமெடி மன்னன் “மதுரை முத்து”, பின்னணிப் பாடகி “லக்ஸ்மி ஜெயன்”, பின்னணிப் பாடகர் சாம்சன் ஆகியோர் கலந்து கொண்டு அரங்கை அதிரவைக்கின்றனர்.
நிகழ்ச்சி நுழைவுக் கட்டணமாக 10,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் வசூலிக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம் பெற +256 758 951124, +256 756 240144, +256 751 306838, +256 751 190290 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.