கம்பாலா (Kampala) என்ற நகரமே உகாண்டாவின் தலை நகரம். இதன் பரப்பளவு 189 சதுர கிலோமீட்டர், ஜனத்தொகை 1.7 மில்லியன் .லேக் விக்டோரியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1190 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Kampala City
கம்பாலாவைப் பற்றிய விவரங்கள்
(More on Kampala)
கம்பாலாவின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. அது அப்போது புகாண்டா (Buganda) எனப்பட்ட பிரதேசத்தை ஆண்டுவந்த முடிச்ஸா I (Mutesa I) என்பவற்றின் வேட்டையாடும் பகுதியாக இருந்தது. இங்குள்ள ஏழு மலைகளும் நகருக்கு அடையாள சின்னங்களாக உள்ளன. அப்போது புகாண்டாவின் தலை நகரமாக இருந்ததும் கம்பாலாதான்.
Entebbe International Airport
கம்பாலாவுக்கு செல்ல வேண்டுமா...?
(Visiting Kampala)
இந்த நகருக்கு செல்ல வேண்டும் எனில் என்டபே விமான நிலையத்துக்கு {Entebbe International Airport (EBB)} சென்று அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்பாலாவுக்கு வாகனத்தில் போக வேண்டும். இந்த விமான நிலையத்துக்கு அட்டிஸ் அபாபா, அம்ஸ்டேர்டம், ப்ருச்செல்ஸ், கைரோ, டர் எஸ் சலாம், துபாய், இஸ்தான்புல், ஜோஹன்னேஸ்புர்க், லண்டன் ஹீத்ரோவ், மொம்பாசா, நைரோபி மற்றும் சான்சிபார் போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் இருந்து கம்பாலாவுக்கு செல்ல 2,000 Shs அல்லது டாக்சியில் சென்றால் 60,000 Shs கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

கம்பாலாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest to visit in Kampala)
(1) கடாஃபி மசூதி, ஓல்ட் கம்பாலா
கம்பாலாவில்  அமைந்துள்ள மிகப்பெரிய மசூதி. முஸ்லிம்களின் வழிபாட்டு  தலம்
Gaddafi Mosque, Old Kampala, Uganda
(2) அஹ்மதியா சென்ட்ரல் மசூதி
ஒரே நேரத்தில் 9,000 வரை அமரக்கூடிய இடம். அகமதிய முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலம்.
Ahmadiyya Central Mosque, Kampala - Uganda
(3) பஹாய் ஹவுஸ் ஆப் வர்க்ஷாப்
பஹாய் ஆலயங்களின் தாயாரைப் போன்ற வழிபாட்டுத் தலம்.
Bahai Temple, Kampala, Uganda
(4) கசுபி டோம்ப்ஸ்
நான்கு புகாண்டா மன்னர்களின் கல்லறை உள்ள இடம்.
Kasubi Tombs
(5) நகசெரோ மார்க்கெட்
ஒரு முக்கியமான கடைவீதி
Nakasero Market, Kampala
(6) உகாண்டா மியூசியம்
உகாண்டாவின் பல்வேறுதரப்பட்ட மக்களின் வாழ்கை முறையைக் காட்டும் மியூசியம். அதில் வேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்ட பல்வேறு ஆயுதங்கள், இசை வாத்தியங்கள் போன்றவை உள்ளன.
Uganda Museum
(7) உகாண்டா தேசிய கலாச்சார மையம்
இங்குள்ள கலாச்சார மையத்தில் திரை அரங்குகள், நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும் கூடம் மற்றும் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு ஓவியர்களின் காட்சிப் பொருட்கள் உள்ளன.
Uganda National Cultural Centre