உகாண்டா தலைநகர் கம்பாலாவில் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறுகிறது. ஓல்ட் கம்பாலாவில் உள்ள ஆகாகான் ஸ்கூல் (Aga Khan School, Old Kampala) வளாகத்தில் வைத்து மாலை 6 மணிக்கு மாநாடு துவங்க இருக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
நல்லிணக்க மாநாட்டிற்கு சென்னையை சேர்ந்த சென்னை தாருல் ஹுதா நிறுவனர் மௌலவி முப்தி உமர் ஷரீப் காசிமி மற்றும் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி ஆகியோர் சிறப்புரை வழங்க இருக்கிறார்கள்.
நிகழ்ச்சி முடிவில் சைவ, அசைவ உணவு விருந்து உபசரிப்பு வழங்கப்படுகிறது. நல்லிணக்க மாநாட்டு நிகழ்ச்சிகளை “உகாண்டா சமூக கலவி நல கூட்டமைப்பு” (Uganda Social Educational Welfare Association – UGASEWA) ஏற்பாடு செய்துள்ளது.