Bwindi (Bwindi Impenetrable National Park) தேசிய பூங்கா தென் மேற்கு உகாண்டா உள்ளது. 331 சதுர கிலோ மீட்டர் பரப்பில் வனப்பகுதியாக காணப்படுகிறது. இதை உலக பாரம்பரிய தலமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்துள்ளது. இது ஒரு உயிரியல் பூங்காவாகும்.
இங்கு 120 பாலூட்டி இனங்களும், 348 பறவை இனங்களும், 220 படடாம்பூச்சி இனங்களும், தவளைகள், ஓணான்கள் மற்றும் பல அழிந்து வரும் 27 இனங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. 163 பூங்கா மர இனங்கள் உள்பட 1000 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் உள்ளது. பூங்காவில் குரங்குகள், சிம்பன்சிகள் உள்ளன. பறவைகள் சரணாலயம் ஒன்றும் உள்ளது.