உகாண்டா தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ட்ரஸ்டியுமாக இருந்து வருபவர் வாஹித் முஹம்மத். இவர் உகசேவா தன்னார்வ சேவை அமைப்பின் பொது செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் உகாண்டா “சேலஞ்சர்ஸ்” (Challengers) என்ற கிரிக்கெட் டீமின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார். முஹம்மத் வாஹித், கன்னியாகுமரி மாவட்டம், மாதவலாயம் ஊரை சேர்ந்தவர்.

கடந்த சில நாட்களாக உகாண்டா T20 நேஷனல் சாம்பியன்சிப் (T20 National Championship) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது வந்தது. இந்த போட்டிகளில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த தமிழர் அனீஃப் ஷா என்பவரும் விளையாடி வருகிறார். இத்தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலுமே சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று வந்த நிலையில் நேற்று (28-01-2018) காலை 9 மணி அளவில் “கியாம்பகோ ஓவல் (kyambogo oval ) ஸ்டேடியத்தில் வைத்து அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
![]() |
வெற்றிக் கோப்பையுடன் சேலஞ்சர்ஸ் அணி |
தொடர்ந்து, மதியம் 3 மணி அளவில் இறுதி போட்டி லுகோகோ ஓவல் ஸ்டேடியத்தில் (Lugogo Oval Stadium) துவங்கியது. இதில் “சேலஞ்சர்ஸ்” அணியுடன் “கட்சி டைகர்ஸ்” (Kutchi Tigers) அணியும் போதின. கட்சி டைகர்ஸ் அணி முதல் ஆட்டத்தை துவங்கியது. 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்திருந்தனர்.
![]() |
ஜிம்பாப்வே வீரர் வின்ஸ்டன் பரிசு வழங்கும் வாஹித் முஹம்மத் |
தொடர்ந்து விளையாடிய சேலஞ்சர்ஸ் அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 8-வது ஓவரிலேயே வெற்றிக்கனியை பறித்தனர். இப்போட்டியில் ஜிம்பாப்வே (Zimbabwe) பிரபல கிரிக்கெட் வீரர் வின்ஸ்டன் மசகட்சா (Winstone Mazakadza) கலந்து கொண்டார்.
![]() |
பரிசு கோப்பையை பெறும் தமிழர் அனீப் ஷா |
சாதனைகள் படைத்த வீரர்களின் விபரம் வருமாறு:
Ivan thamwethamira (Best Wicket Keeper)
Irfan Khan Afridi (Best Bowler)
Kyobe Arthur (Best Batsman)
Aneef Sha Zahyaan Al-haaliq (Man Of The Series)
Shehzad – (Man of the Match – Final)
வெற்றி பெற்றவர்களுக்கு சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் முஹம்மத் வாஹித் வாழ்த்துக்களை வழங்கி பாராட்டினார்.
![]() |
பரிசு கோப்பையை பெறும் இர்பான் அஃப்ரிடி |
![]() |
பரிசு கோப்பையை பெறும் ஆர்தர் கியோபே |
![]() |
பரிசு பெறும் ஷேஹ்சத் (Shehzad) |
![]() |
2-ம் இடம் பெற்ற அணி கேப்டனுடன் சேலஞ்சர்ஸ் உரிமையாளர் வாஹித் முஹம்மத் மற்றும் மெட்ரோ டயர்ஸ் உரிமையாளர் அப்துல் முபாரக் |
0 Comments