உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “தமிழர் திருநாள் விழா” 28-01-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.
 |
உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் |
 |
(வலமிருந்து) சங்க டிரஸ்டி வாஹித் முஹம்மத், தலைவர் எம்.எஸ்.சலீம், செயாளர் முஹம்மத் ராபி ஆகியோர் நினைவு பரிசு வழங்கிய காட்சி |
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள “கிவாற்றுலே ரிகிரியேஷன் சென்டர்” –ல் (Kiwatule Recreation Centre) வைத்து
நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் காலை 10:30 மணி முதல் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை உகாண்டா தமிழ் சங்கத் தலைவர் எம்.எஸ். சலீம் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார்.
 |
பொங்கலிடும் தமிழ் பெண்கள் |
பொங்கல் வழிபாட்டுடன் துவங்கப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் வடம் இழுத்தல், பானை உடைத்தல், கபடி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 |
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பெண்கள் |
மதியம் அறுசுவையுடன் கூடிய தமிழர் பாரம்பரிய உணவு விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் உகாண்டா வாழ் தமிழர்கள், உகாண்டாவினர் உள்பட வெளிநாட்டினரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 |
வடம் இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் |
நிகழ்ச்சியில் தமிழ் சங்க நிர்வாகிகள் தலைவர் எம்.எஸ்.சலீம், துணைத் தலைவர் பாபு, செயலாளர் முஹம்மது ராபி, துணை செயலாளர்கள் காதிரி மற்றும் ஹேமலதா, பொருளாளர் காளிதாஸ், துணை பொருளாளர் ரஞ்சனி, டிரஸ்டிகள் ஈஸ்வர், சேகரன், சாதிக் சாகுல், வாஹீத் முஹம்மத், முஹம்மது ரைசுதீன், சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கட் கிருஷ்ணன், சபீக், சுரேஷ் பாபு, சிவகுமார், சுரேஷ் திருமலை, செய்து ஹாஜி, வாணி கிருஷ்ணமூர்த்தி, இளம்பிறை கணேசன், முஹம்மது ரயீஸ், சக்திவேல் கலந்து கொண்டு, விழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். விழா நிகழ்ச்சிகள் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
 |
இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர்களுடன் தலைவர் எம்.எஸ்.சலீம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் வெங்கட் கிருஷ்ணன் |
0 Comments