பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் (WhatsApp) செயலி உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செயல்படாமல் முடங்கியது. வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக செய்திகள் செல்லாத நிலையே நீடித்தது.
வாட்ஸ்-அப் பயனாளர்கள் பிற சமூக வலைதளங்களில் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க தொடங்கினர். சர்வர் பிரச்சினை காரணமாகவே வாட்ஸ்-அப் செயலி செயல்பாட்டில் பிரச்சினை நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்-அப் செயலியில் செய்திகள் மட்டும் நகர்வின்றி காணப்பட்டது.

ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் வாட்ஸ்-அப் சேவை முடங்கியதாக தெரிகிறது. வாட்ஸ்-அப் செயலிழந்தது என டுவிட்டரில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. #whatsappdown என்ற ஹேஸ் டேக் பயன்படுத்தி உலகம் முழுவதும் பயனாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர். இப்போது வாட்ஸ் - அப் செயலி செயல்பட தொடங்கியது.

கடந்த மே மாதமும் உலகம் முழுவதும் வாட்ஸ் - அப் செயலி செயல்படாமல் முடங்கியது.