உகாண்டாவில் பொதுவாக திருட்டு தொடர்பான குற்றச்செயல் அதிக அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கார், பணம் மற்றும் தொலைபேசிகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சாலையில் மொபைல் போனில் பேசியபடி சென்றால், அந்த போனுக்கு உத்திரவாதம் கிடைப்பது அரிது.
இந்நிலையில், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள போலீசாருக்கு மொபைல் போன் திருட்டு பற்றிய புகார் அதிகஅளவில் வந்த வண்ணம் இருந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் (02-11-2017) போலீசார் கம்பாலாவில், நடத்திய அதிரடி சோதனையில், சந்தேகப்படும்படி காணப்பட்ட 15 போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தொலைபேசிகள் திருடியது தெரியவந்ததை அடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 150 தொலைபேசிகளை போலீசார் மீட்டுள்ளனர். இதன் மதிப்பு மில்லியன் கணக்கான ஷில்லிங்க்ஸ் மதிப்பினை உடையதாக கம்பாலா மெட்ரோபோலிடன் போலீஸ் (Kampala Metropolitan Police) துணை செய்தி தொடர்பாளர் லுகே ஒவேசிகிரே (Luke Owesigyire)கூறினார். மேலும் அவர், கம்பாலா நகரை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதில் 15 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறனார்.
0 Comments