இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் வர்மா. இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு கென்னத் ஜஸ்டெரின் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார்.
கென்னத் ஜஸ்டெர், கடந்த ஜூன் மாதம் வரை டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராகவும் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக கடந்த 2001 முதல் 2005-ம் ஆண்டுவரை, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வணிக செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், இந்தியாவிற்கான அமெரிக்கா தூதராக கென்னத் ஜெஸ்டெர் செயல்படுவதை அந்நாட்டு செனட் சபை உறுதி செய்துள்ளது.