உகாண்டாவில் உள்ள முலாகோ தேசிய மருத்துவமனையின் (Mulago National Referral Hospital) முன்னாள் நிர்வாக இயக்குநர் டாக்டர் லாரன்ஸ் கக்வா (Dr Lawrence Kaggwa), இன்று (10-11-2017) காலையில் மரணமடைந்தார். இவர் இருதயம் சம்பந்தப்பட்ட நோயினால் மரணமடைந்ததாக தெரிகிறது. அவருக்கு வயது 68.
உகாண்டா ஹார்ட் இன்ஸ்டிடியூட் (Uganda Heart Institute (UHI))-ன் மக்கள் தொடர்பு அதிகாரிதிருமதி கிரேஸ் மிரேம்பே (Ms Grace Mirembe), முலாகோ முன்னாள் நிர்வாக இயக்குநர் இன்று காலை 9.25 மணி அளவில் இறந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, அக்டோபர் 16-ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவந்தார். சுமார் 24 நாட்கள் சிகிட்சை பெற்றுவந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக அவரை நாங்கள் இழந்து விட்டோம், எனக்கூறினார்.

டாக்டர் லாரன்ஸ் காகவா, 2005-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார்.