உகாண்டா மக்கள் பாதுகாப்பு படை (Uganda People’s Defence Forces (UPDF)) பிரிவில் ஒரு சிறிய அளவிலான மறுசீரமைப்பை, உகாண்டா அதிபர் முசேவெனி மேற்கொண்டார்.
UPDF-ல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றுதான் என, அதன் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் கரெமியர் (Richard Karemire, UPDF Spokesman) கூறினார்.

இந்த மறுசீரமைப்பின் படி, Operation Wealth Creation Operations ((OWC))-ல் இயக்குநராக இருந்த பிரிக் ஸ்டீபன் காஷூர் (Brig Stephen Kashure) கிமாகாவில் (Kimaka) உள்ள UPDF-ன் மூத்த கமாண்ட் மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் (UPDF Senior Command and Staff College) துணை தளபதியாக (Deputy Commandant) நியமனம் செய்யப்பட்டார்.

சோமாலியாவில் AMISOM -ன் UPDF போர் குழு XIV க்குத் தளபதியாக இருந்த கேப்டன் பாப் ஒகிக் (Col Bob Ogik), கிமாகாவில் உள்ள மூத்த கமாண்ட் மற்றும் பணியாளர் கல்லூரிக்கு (Senior Command and Staff College) ஒருங்கிணைப்பாளராக (Coordinator) மாற்றப்பட்டுள்ளார்.

கிமாக்காவில் துணை தளபதியாக இருந்த பிரிக் க்றிஸ் போஸா (Brig Chris Bossa), தற்போது UPDF-ன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொறியியல் கல்லூரியின் (College of Logistics and Engineering) தளபதியாக (Commandant) இருப்பார்.

ஹெர்பர்ட் போனியே (Herbert Mbonye) பாதுகாப்பு ஆலோசகராக நைஜீரியா செல்கிறார்.

உகாண்டா ரேபிட் வரிசைப்படுத்தல் திறன் மையத்தின் (Uganda Rapid Deployment Capability Centre) புதிய தலைமை அதிகாரியாக மைகேல் எஸ்வாபு (Michael Eswapu) நியமிக்கப்பட்டுள்ளார்.