ஆஃரிக்க நாடான ஜிம்பாப்வேயில் நேற்று (15-11-2017) நடந்த இராணுவ தளபதிகளின் நடவடிக்கைகளுக்கு உகாண்டா கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டில் ஜனாதிபதி ராபட்ர் முகாபே (Robert Mugabe) வீட்டு சிறையில் (House Arrest) வைக்கப்பட்டுதற்கும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே இராணுவம், ஜனாதிபதியை சுற்றி கிரிமினல்கள் இருப்பதாக கூறி, அவர்களால் சதித்திட்டம் நிகழக்கூடும் என மேற்கொள்ளப்பட்ட, புரட்சிகர ஒழுங்கமைப்பை கட்டமைப்பதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை உறுதிபடுத்த மறுத்துவிட்டனர்.
உகாண்டாவின் சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர் (Uganda’s State Minister for International Relations) ஒகேல்லோ ஒரியேம் (Okello Oryem) கூறும்போது, தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் உகாண்டா, ஜிம்பாப்வேயின் வளர்ச்சியில் மிகவும் நெருக்கமான கொள்கையினை பின்பற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், உகாண்டா தொடர்ந்து சட்டபூர்வமான தலைமையைக் கொண்ட அரசாங்கத்தை அங்கீகரிக்கிறது. ஜிம்பாப்வேயில் இராணும், அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் எச்சரித்தார்.


0 Comments