உகாண்டா, கம்பாலாவில் “உகாசேவா” அமைப்பு சார்பில் வருகிற டிசம்பர் 3-ம் தேதி 7-வது முறையாக மாபெரும் உணவு திருவிழா நடைபெறுகிறது. உணவு திருவிழா கம்பாலாவில் உள்ள இந்தியன் அசோசியேஷன் வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.

“உகாசேவா” என்ற தன்னார்வ சேவை அமைப்பு 23 ஆண்டுகளாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மருத்துவ உதவிகளை பெருமளவில் வழங்கி வருகிறது.
ஸ்பான்ஸர்கள், விருந்தினர்கள் என்கிற பன்முக அணிவகுப்பில் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டு ஆறாண்டுகள் நடந்தேறிய இத்திருவிழா ஏழாவது முறையாக நடைபெறவிருக்கிறது.
குணங்கள் நிறைந்த உணவுக்குழுவின் கைவரிசையில் மணங்கள் கமழ சமைத்து, உண்போர்களின் நாவுகளை வித்தியாசமான சுவையில் வருடுகிற உணவு வகைகளை சுவைபட பரிமாறி வழங்க உள்ளது இத்திருவிழா.
இந்த மாபெரும் உணவு திருவிழாவுக்கான டிக்கெட்டுகள் 13-11-2017 முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உணவு விழாவை இணைந்து சிறப்பிக்க விரும்பும், ஸ்பான்ஸர்கள் மற்றும் விருந்தினர்கள் “உகாசேவா” நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments