ஜிம்பாப்வே அதிபராக ராபர்ட் முகாபே (83) கடந்த 37 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இவரை நல்லெண்ண தூதராக உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) சமீபத்தில் நியமித்தது.

அதற்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் புதிய டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் காபிரியேசுஸ் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசு, கனடா பிரதமர், ஐ.நா. கண்காணிப்பு குழு, உலக இருதய பெடரேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே மீது மனித உரிமை மீறல்கள் புகார் உள்ளது. மேலும் இவரது 37 ஆண்டு கால ஆட்சியில் 20 ஆண்டுகள் சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வந்தார்.
ஜிம்பாப்வேயில் 2000-ம் ஆண்டில் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து அங்கு சுகாதார நிலை படுமோசமான நிலையில் உள்ளது. எனவே அவருக்கு உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ண தூதர் பதவி அளிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.

பலத்த எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தொடர்ந்து ராபர்ட் முகாபேயை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேபிரியேசுஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) அறிவித்துள்ளார்.
0 Comments