தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள “மெர்சல்” என்ற திரைப்படம், கடந்த 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.
“மெர்சல்” திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை (Goods and Service Tax - GST) வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்தது. 

“மெர்சல்” படத்தில் இடம்பெற்று உள்ள காட்சிகளை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பாரதீய ஜனதா தரப்பில் வழுத்தது. மாறாக எதிர்க்கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மெர்சல் காட்சியை நீக்க எதிர்ப்பு தெரிவித்தன.

பிரச்சனை தொடர்ந்து நீடித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் பட விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்தது விட்டது என கூறி உள்ளார். எனக்கு தொலைபேசியில் விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன் என தமிழிசை கூறி உள்ளார்.