விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிராமாண்டமாக 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் “மெர்சல்”. இந்த படத்தில் விஜய் வித்தியாசமான மூன்று கெட்டப்பில் நடித்திருப்பதாக தெரிகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இவர்களுடன் வைகைபுயல் வடிவேலு, கோவை சரளா, ராஜேந்திரன், சத்யன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்.

“மெர்சல்” படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை அட்லி இயக்கியுள்ளார். இதனால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. இந்தியாவில் நாளை (18-10-2017) ரிலீஸ் ஆகிறது.

“மெர்சல்” திரைப்படம் உகாண்டா, கம்பாலாவில் உள்ள அகாசியா மால் காம்ப்ளக்ஸ் செஞ்சுரி சினிமேக்ஸ் (Century Cinemax, Acacia Mall, Kampala, Uganda) திரையரங்கில் வரும் சனிக்கிழமை (21-10-2017) அன்று இரவு 9 மணி காட்சியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (22-10-2017) மதியம் 2.30 மணி காட்சியும் காண்பிக்கப்படுகிறது.

டிக்கெட்டுகள் புதன்கிழமை (18-10-2017) முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. 25,000, 40,000 மற்றும் 50,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் கட்டணமாக பெறப்படுகிறது.