துபாய் நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் புகழ்பெற்ற நிறுவனம் “பிக்ஸ்டன் இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட்” (Bixton International Private Limited). இந்த நிறுவனத்தின் கிளைகள் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் உள்ளன.
உகாண்டா நாட்டில் கம்பாலாவில் பிக்ஸ்டன் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. உகாண்டா நாட்டில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக கால்பந்து போட்டி இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (01-10-2017) மாலை 4 மணி அளவில் பிக்ஸ்டன் நிறுவன பணியாளர்களுக்கும், உகாண்டாவில் உள்ள சைனாவை (China) சேர்ந்த நிறுவனமான “சிண்ட்” (Chint) பணியாளர்களுக்கும் மாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
போட்டி கம்பாலாவில் உள்ள “வில்லா பார்க்” (Villa Park) மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டி துவங்கிய சில நிமிடத்திலேயே பிக்ஸ்டன் வீரர் லிகான் (Likan) முதல் கோலை (Goal) அடித்தார். இதனால் விளையாட்டு மிகவும் பரபரப்பானது. தொடர்ந்து பிக்ஸ்டன் வீரர் சேமாங்கா சலாவாஹா (Ssemanga Salawaha) 3 கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதனால் சிண்ட் வீரர்கள் திணறினர். ஆனாலும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.

சிறந்த விளையாட்டு வீரராக 3 கோல்களை பெற்ற சேமாங்கா சலாவாஹா (Ssemanga Salawaha) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றி பெற்ற பிக்ஸ்டன் வீரர்கள் விபரம்:
  1. குகோசா அப்பாஸ் (Kukoza Abbas – Goal Keeper)
  2. காஜிமு பசீர் (Kajimu Basheer)
  3. காண்டியா ஜிம்மி (Candia Jimmy)
  4. முஹம்மது லுவாமா (Muhamed Luwama)
  5. ஜிடோகோ பஷீர் (Gidogo Basheer)
  6. பலுக்கு ஜிம்மி (Baluku Jimmy)
  7. ஃப்ராங்க் (Frank)
  8. இஸ்மா அலி (Isma Ali)
  9. சேவாரியோ கூலே (Sewerio Kule)
  10. ஒஜோக்ஸ் அலெக்ஸ் (Ojox Alex)
  11. சேமாங்கா சலாவாஹா (Ssemanga Salawaha)
  12. லிகான் (Likan – Substitute Player)
வெற்றி பெற்ற வீரர்களுக்கு நிறுவன மண்டல இயக்குநர் அஹமத் முஸ்தபா வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.