அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று லாஸ்வேகாஸ் நகர போலீசார் தெரிவித்து இருந்தனர்.

கொலையாளி ஸ்டீபன் பட்டோக் வீடு நிவேடா மாகாணத்தில் உள்ள மெஸ் குயிட் நகரில் உள்ளது. அங்கு அவனது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் சில ஆயிரம் ரவுண்டு சுடக் கூடிய தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை வெடிக்க செய்யும் எலெக்ட்ரானிக் கருவிகள் குவியல் குவியலாக சிக்கின.அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கொலையாளி ஸ்டீபன் பட்டாக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து உள்ளது.
ஸ்டீபன் வசதிபடைத்த ஒரு முன்னாள் கணக்காளர். தனது பணியில் இருந்து ஓய்வுபெற்று அமைதியான முறையில் அவர் வாழ்ந்து வதுள்ளார்.
ஸ்டீபன் பேடக் விமான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளார். அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீபன் தீவிர சூதாட்ட பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகே முன்பு குடியிருந்த ஒருவர் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீபன் பட்டாக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஒரு அமெரிக்க அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


0 Comments