உகாண்டா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். தமிழர்கள், மலையாளிகள் உள்பட பல்வேறு மாநிலத்தவர்கள் இங்கு உள்ளனர்.

இங்கு இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் அனைத்தும் வெகு சிறப்புடன் இந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை காலமாக உள்ளதால், உகாண்டாவிலும் தீபாவளி களைகட்டி உள்ளது.
உகாண்டாவில் தீபாவளி திருநாள் கொண்டாட்டம், கம்பாலா அருகில், முநோன்யோ என்ற பகுதியில் உள்ள ஸ்பிக் ரெசார்ட் (Speke Resort, Munyonyo) மைதானத்தில் வைத்து நடைபெறும். இந்த ஆண்டு நேற்று (15-10-2017) கொண்டாடப்பட்டது.

குறிப்பாக இந்திய வர்த்தக நிறுவனங்களால் ஸ்டால்கள் உருவாக்கப்பட்டு, பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டன. வடஇந்திய உணவு வகைகள் மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டது. இந்தியர்கள் அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
அப்பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான மக்கள் பட்டாசுகளை வாங்கி, அதை பற்றவைத்து ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காலை முதல் இரவு 10 மணி வரை திருவிழா களைகட்டியது.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், உகாண்டாவினரும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
0 Comments