உகாண்டா, கம்பாலாவில் உள்ள நாசர் ரோட்டில் (Nasser Road in Kampala) வர்த்தகம் செய்து வந்தவர் ஸ்டான்லி முபிரு (Stanley Mubiru). இவருடைய வீடு வகிசோ மாவட்டத்தில் சும்ப்வே (Ssumbwe) என்ற பகுதியில் உள்ளது.

இவர் நேற்று முன்தினம் (02-10-2017) இரவு வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
கொலை செய்யப்பட்டு இறந்துபோன ஸ்டான்லிக்கு, அவரது காதலி டெட்டி நபுகென்யா (Teddy Nabukenya) தொலைபேசியில் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அழைப்பை அவர் எடுக்காததால், சந்தேகமடைந்த காதலி அவரது வீட்டிற்கு வந்து ஸ்டான்லி இறந்து போன தகவலை அறிந்துள்ளார்.
![]() |
ஸ்டான்லியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் |
இறந்துபோன ஸ்டான்லி உடலை போலீசார் கைப்பற்றி முலகோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உகாண்டா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments