உகாண்டாவில் பொதுப்பணி அலுவலகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் குறுகிய மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாகரீகமான உடை அணிந்து பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கும் இறுக்கமான, டி-சர்ட் போன்ற ஆடைகள் பணிநேரத்தில் அணிய தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உகாண்டா, வகிசோ மாவட்டத்தில் (Wakiso District) கசாங்கட்டி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் (Kasangati Magistrate’s Court) எழுத்தராக பணிபுரிபவர் திருமதி ரோஸ்மேரி நவுமாங்கா (Ms Rosemary Namuwanga). இவர் கடந்த வியாழன் அன்று பணி நேரத்தில் மிகவும் இறுக்கமான, குறுகிய ஆடையினை அணிந்திருந்தார்.

இதனைதொடர்ந்து, பொதுசேவை அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் (Permanent Secretary of Ministry of Public Service), திருமதி ஜோசபின் முவோங்கே (Ms Josephine Muwonge), ரோஸ்மேரி மீது அநாகரீகமான முறையில் ஆடை அணிந்த குற்றத்திற்காக இடைநீக்கம் (Suspended) செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே இதுதொடர்பான தடை உத்தரவினை அரசு வழங்கிய நிலையில், ரோஸ்மேரி மீறியதற்காக இடைநீக்க தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.