கூகுளின் அதிகாரப்பூர்வ பணப்பறிமாற்ற செயலியான ‘TEZ' இந்தியாவில் வெளியானது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஏராளமான மொபைல் செயலிகள் (Apps) உள்ளன. இந்நிலையில் வெகு நாட்களாக எதிர்பார்பில் இருந்த வந்த கூகுளின் பணப்பறிமாற்ற செயலியான ‘TEZ' வெளியாகியுள்ளது. இந்த செயலியை கொண்டு நம் வங்கி கணக்கை இணைத்தால், அதன் மூலம் பல்வேறு பணப்பறிமாற்றம் எளிதில் செய்துக் கொள்ளும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி, மற்ற பணபரிமாற்ற செயலிகளை போல் அல்லாமல் அதை விட சிறப்பு அம்சங்களை கொண்டாதாக இருக்கும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் பணத்தை செயலியில் ஏற்றாமல், வெறும் வங்கி கணக்கை இணைப்பதன் மூலம் நீங்கள் செய்யும் வர்த்தகத்திற்கான பணத்தை தரவோ / பெறவோ முடியும்.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும், 20 முறை பணப்பறிமாற்றமும் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ், எச்.டி.ஃஎப்.சி, எஸ்.பி.ஐ மற்றும் UPI சார்ந்த அனைத்து வங்கிகளிலும் கூகுளின் இந்த செயலியை இணைத்துக் கொள்ளலாம்.