உகாண்டா பாராளுமன்றத்தில், அதிபராக இருப்பவர்களின் வயது உச்சவரம்பை நீக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இன்று அதன் மீதான தீர்மானம் ஏற்படுத்தப்படுகிறது.
FDC-ன் தலைவர் கிஸ்ஸா பெசிஜியே கைது செய்யப்பட்ட நிலையில் காரில் அமர்ந்துள்ளார்
உகாண்டா அரசியலமைப்பு சட்டம் 102 (b)-ன் படி, உகாண்டா அதிபர்களாக இருப்பவர்கள் 75 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும், வயது உச்சவரம்பிற்கு மேற்பட்டவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

தற்போது அதிபராக இருக்கும் யோவேரி முசேவெனி (Yoweri Museveni)-ன் தற்போதைய வயது 71. ஆகையால் அவர் 2021 ஆம் ஆண்டு உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து உகாண்டா அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர “வயது உச்சவரம்பு” சட்டப்பிரிவை 102 (b) நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதைய அதிபர் யோவேரி முசேவெனி
இன்று அதன் மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4 முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும், ஜனநாயக மாற்றத்திற்கான பேரவையின் தலைவருமான (Forum for Democratic Change (FDC) டாக்டர் கிஸ்ஸா பெசிஜியே (Dr Kizza Besigye) இன்று கைது செய்யப்பட்டார். மசோதா நடைமுறை படுத்தப்படும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கம்பாலா மத்திய போலீஸ் நிலைய டிபிசி ஜோசப் பகலெகே (Joseph Bakaleke), பெசிஜியே-வை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டபோது, அவர் தன்னுடைய காரில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால் அவர் காரிலேயே இருந்தார்.

இதற்கிடையில், கிழக்கு ஆப்பிரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஃப்ரெட் முகஸா மபிடே (Fred Mukasa Mbidde) கைது செய்யப்பட்டுள்ளார்.