உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இருந்து ஜின்ஜா (Jinja) செல்லும் சாலையில் முகோனோ மாவட்டத்தில் (Mukono district), சீற்றா (Seeta) என்னும் பகுதி உள்ளது. இங்கு வாட்டர்லூ இன்டர்நேஷனல் மழலையர் பள்ளி (Waterloo International Kindergarten School) உள்ளது. இந்த பள்ளியில் ஜோசப் இலகுட்டி (Joseph Ilakuti – வயது 5) மற்றும் ஜீன் கன்சிமிர் (Jean Kansimire – வயது 3) ஆகிய குழந்தைகள் பயின்று வந்தனர்.
பாசில் டிங்கா (Basil Tinka) மற்றும் டிங்கா (Tinka) ஆகியோரின் மகள் ஜீன் கன்சிமிர் ஆவார். டிங்காவின் குடும்பத்தை சேர்ந்தவர் ஜோசப் இலக்குட்டி என்ற குழந்தை. குழந்தைகள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

குழந்தைகள் இருவரும் நேற்று (02-08-2017) காலை பள்ளி வளாகத்தினுள் செல்வதற்காக காத்திருந்த போது, ஜின்ஜாவில் இருந்து கம்பாலா நோக்கி வந்த எரிபொருள் டேங்கர் லாரி குழந்தைகள் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இருகுழந்தைகளும் நசுக்கப்பட்டதாக தெரிகிறது.
Basil Tinka (Father of  Jean Kansimire)
குழந்தைகள் இருவரையும் குடும்பப் பணிப்பெண் கூட்டி சென்ற நிலையில், டேங்கர் இவர்களை நோக்கி வருவதை கண்ட பணிப்பெண், குழந்தைகளை விட்டு விலகி சென்றதாகவும், குழந்தைகள் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

பின்னர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து காவல் அதிகாரிகள் வந்து குழந்தைகள் உடலை கைப்பற்றி முலகோ மருத்துவமனைக்கு (Mulago Hospital) எடுத்துச் சென்றனர். டேங்கர் ஓட்டுநர் சார்லஸ் ஒலூ (Charles Oloo) போலீஸ் நிலையத்தில் உள்ளார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரி, முஹம்மது மக்வா (Muhammed Magwa) கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.