உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் கம்பாலாவில் உள்ள “கோல்ஃப் கோர்ஸ் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில்” வைத்து, கடந்த 29-ம் தேதி இரவு 7 மணி அளவில் இசை மழை விருந்து மற்றும் காமெடி ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி பாடகர் ரஹ்மான் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி புகழ் சுருதி ஆகியோர் கலந்து கொண்டனர். காமெடி நிகழ்ச்சிகளில் தனக்கென தனிமுத்திரை பதித்த பிரபல காமெடி ஸ்டார் “விக்னேஷ் விஜயன்” கலந்து கொண்டு, ஸ்டாண்ட் அப் காமெடி, பலகுரல் உள்பட பல நிகழ்ச்சிகளை வழங்கினார்.
உகாண்டா வாழ் தமிழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலிக்கு துபாய் சென்று வர இலவச டிக்கெட் எமிரேட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்கத்தலைவர் எம்மெஸ் சலீம், பொது செயலாளர் முஹம்மது ராபி உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.