உகாண்டாவில் ஆகஸ்ட் 20-ம் தேதி “இந்தியன் பெண்கள் அசோசியேசன்” சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் துவங்குகிறது. இதற்கான துவக்க நிகழ்ச்சி “ராம்கரியா சிக் (சீக்கிய) ஸ்போர்ட்ஸ் கிளப்” (Ramgharia Sikh Sports Club “KATI-KATI”) வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியானது "கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கம்பாலா நகர ஸ்கூல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 12 முதல் 18 வயதிற்குள்ப்பட்டவர்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், வீல் செயர் (Wheel Chair) ஓட்டக்காரர்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் நடைபெறுகிறது. கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு 10,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் பதிவு கட்டணம் பெறப்படுகிறது. வீல் செயர் பங்கேற்பாளர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

இதற்கான பதிவை “Indian Women Association” அலுவலகம் மற்றும் ஆன்லைனில் http://iwauganda.org/ வழியாக செய்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பலபரிசுகள் வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு மேல் போட்டியாளர்களில் வெற்றி பெறுபவருக்கு 5 மில்லியன் ஷில்லிங்க்ஸ் பரிசும், 18 வயதிற்குக்கீழ் போட்டியாளர்களில் வெற்றி பெறுபவருக்கு 1 மில்லியன் ஷில்லிங்க்ஸ் பரிசும், வீல் செயர் வெற்றியாளருக்கு 2 மில்லியன்ஸ் ஷில்லிங்க்ஸ் பரிசும் வழங்கப்படுகிறது.



0 Comments