உகாண்டாவில் பயங்கரவாத, கொலைகள் செயல்களில் ஈடுபட்டதாக தபிலீக் மதகுரு முஹம்மத் யூனுஸ் கமோகா (Mohamed Yunus Kamoga), மற்ற மதகுருக்களான சிராஜ் கவூயா (Siraje Kawooya), முர்டா முட்டே புகென்யா (Murta Mudde Bukenya), ஃபாஹத் கலுங்கி (Fahad Kalungi), ககன்டே யூசுபு என்ற அப்துல்லா (Kakande Yusufu alias Abdallah) மற்றும் செகயஜா அப்துல் சலாம் என்ற காசிம் முலும்பா (Sekayaja Abdulsalam alias Kassim Mulumba) ஆகிய 6 பேரை உகாண்டா கிரிமினல் உயர்நீதிமன்றம் குற்றாவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை வழங்கியது.

உயர்நீதிமன்றத்தின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிரிவில், நீதிபதி எசேக்கியல் முஹங்குசி (Ezekiel Muhanguzi) தலைமையிலான அமர்வு, குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, முகம்மத் யூனுஸ் கமோகா, சிராஜ் கவூயா, முர்டா முட்டே புகென்யா, ஃபாஹத் கலுங்கி ஆகிய 4 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனையும், ககன்டே யூசுபு மற்றும் அப்துல் சலாம் ஆகிய இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது முஸ்தபா பஹிகா (Mustafa Bahiga), முன்னாள் கம்பாலா மாவட்ட அமீர் மற்றும் ஹசன் இப்ராஹிம் கிரியா (Hassan Ibrahim Kirya), உள்பட கொலைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பான செய்திகளை அனுப்பியதும், மசூதிகளில் விநியோகம் செய்யப்பட்டதும், தங்கள் வீடுகளில் கூட்டங்கள் நடத்தில் கொலை செய்யப்படுவதற்கான திட்டங்கள் தீட்டியதாகவும், பல சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வைத்திருந்ததாகவும், முஸ்லிம் பிரிவின் போட்டியாளரான, தபிலீக் பிரிவின் தலைவரான டாக்டர். ஹரூனா ஜெம்பா (Dr. Harouna Jjemba) கொலையில் ஈடுபட்டதாகவும் உள்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆயுள் தண்டனை பெற்றவர்களை பின்னர் நீதிமன்றத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


0 Comments