உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இம்மாதம் ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் “கம்பாலா இரட்டையர்கள் திருவிழா” கம்பாலாவில் இருந்து ஜின்ஜா செல்லும் சாலையில் அமைந்துள்ள “கியாடோன்டோ ரக்பி க்ளப் – Kyadono Rugby Club” வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 10 மணி முதல் துவங்கியது.

உலகில் அதிகபடியான இரட்டையர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக உகாண்டா திகழ்கிறது. “டபுள் தி ஃபன் - Double the fun” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்த ஆண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான இரட்டையர்கள் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் கலந்து கொண்டனர்.

குறிப்பிடும் படியாக கலந்து கொண்ட இரட்டையர்களில் 86 வயதான எமிரினா பாபிரி மற்றும் கிறிஸ்டியனே நகொடோ (Emirina Babirye and Christine Nakato) மிக பழமையான இரட்டையர்கள் ஆவார்கள்.
![]() |
86 வயதான எமிரினா பாபிரி மற்றும் கிறிஸ்டியனே நகொடோ |

குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், தாய்மார்கள், தந்தைமார்கள், வயதானவர்கள் என இரட்டைகள் கலந்து கொண்டு திருவிழாவை அலங்கரித்தனர்.


குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், முகத்தில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பலூன் விளையாட்டுகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை வரை திருவிழா நடைபெற்றது.


0 Comments