உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள மக்கள் அதிகமாக கூடும் இடம் நகசெரோ சந்தை (Nakasero Market Road) சாலை பகுதி. இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.
இப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்று சுமார் 10 ஆண்டுகளாக வணிகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக வாகனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு காரில் பணியாளர்கள் வேலைக்கு வந்து, செல்வதுமாக இருந்தது. பணியாளர்கள் வேலை முடிந்து செல்லும் வரை கார் சாலை ஓர பார்க்கிங்-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் நேற்று (14-07-2017) வழக்கம் போல் பணியாளர்கள் காலையில் வேலைக்கு வந்த பின்னர் கார் அருகிலுள்ள கார் பார்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர் செல்ல காரை தேடியபோது, கார் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து நிறுவனத்தின் மேலாளர், கம்பாலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் உகாண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டா நாட்டின் பல பகுதிகளில் திருட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்தியர்கள் மிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.