உகாண்டா டேபிள் டென்னிஸ் சங்கத்தின் (Uganda Table Tennis Association - UTTA) “புரவலராக” (Patron) உகாண்டா தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், உகசேவாவின் பொது செயலாளரும், சன் காஸ்மெடிக் (Sun Cosmetics) நிறுவனத்தின் தலைவருமான “வாஹித் முஹம்மத்” (Vaheed Mohamed) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நியமனம் செய்யப்பட்டுள்ள “வாஹித் முஹம்மத்” அவர்களை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்தது அவர் உகாண்டா நாட்டின் “தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள்” சந்திப்பில் கலந்து கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாஹித் முஹம்மத்” அவர்களுக்கு “Bixton International Limited” நிறுவனத்தின் பொது மேலாளர் அஹமத் முஸ்தபா மற்றும் பணியாளர்கள் வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றனர்.