உகாண்டாவில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள் அணியும் ஆடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பை உகாண்டா “பொது சேவை அமைச்சகம்” எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய அரசு விதிகளின் படி, அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் முழங்கால்களுக்கு மேலே இருக்கும் ஆடைகள், கையில்லாத பிளவுஸ்கள் (Sleeveless Blouses) மற்றும் முழுமையாக மறைக்கப்படாத ஆடைகள் அனுமதிக்கப்படாது, என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜடை மற்றும் நீட்டிக்கப்பட்ட ஜடை தடை செய்யப்பட்டுள்ளன.
ஆண்கள், முழுக்கை சட்டை (Long-sleeved Shirts) அணிய வேண்டும். மிகவும் பிரகாசமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிய கூடாது. மிகவும் இறுக்கமான உடைகள் அணியவும் கூடாது.
பொது சேவை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, அனைத்து சீருடை இல்லாத அரசு ஊழியர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் பொருந்தும்.


0 Comments