உகாண்டாவில் வாழும் மக்களில் 73 சதவீத மக்கள் கழிவறையை பயன்படுத்திய பின்னர், தங்கள் கைகளை சோப்பு அல்லது தண்ணீரை கொண்டு கழுவுதல் இல்லை என்ற அதிர்ச்சியான தகவலை உகாண்டா சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜேன் ருத் அகெங் (Dr. Jane Ruth Aceng) தெரிவித்துள்ளார். 27 சதவிகிதத்தினர் மட்டுமே கழுவுகின்றனர்.

ஜூலை 5-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் டாக்டர் அகெங் கூறும்போது, “குறுகிய காலத்தில் குடற்காய்ச்சல் (Typhoid), காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தடுக்ககூடிய நோய்கள் காரணமாக இறப்பு ஏற்படுகிறது.
பலர், தங்கள் கைகளை கழுவுவதில்லை. ஒருவேளை அவர்கள், தங்களை தாங்களே தொடுவதனால் ஆபத்து இருப்பதாக கருதவில்லை. ஆனால் அவர்கள் வேறு யாரோடும், கைகளை குலுக்குவதனால், கிருமிகளை பரப்ப ஏதுவாகிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது என அவர் கூறினார்.
உகாண்டா சுகாதாரத்துறை அமைச்சகம், வானொலி மற்றும் தொலைகாட்சி மூலமாக மக்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வலியுறுத்தி தகவல் வழங்கப்பட்டுள்ளது.


0 Comments