உகாண்டா ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கம்பாலா மேயருமான (Democratic Party President and Kampala Mayor) ஜாண் செபானா கிஸிடோ (John Ssebaana Kizito) உடல் நலக்குறைவால் கம்பாலாவில் உள்ள நகசெரோ (Nakasero Hospital) மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். இத்தகவலை ஜனநாயகக் கட்சியின் தற்போதைய தலைவரான நாபர்ட் மாவோ (Norbert Mao) தெரிவித்தார்.

மரணமடைந்த கிஸிடோ ஜூன் 19-ம் தேதி அன்று பக்கவாத நோய் ஏற்பட்டதால், நகசெரோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கோமாவில் இருந்ததாக தெரிகிறது.
1934-ம் ஆண்டு பிறந்த செபானா, தொழிலதிபராக, பொருளியியல் வல்லுனராக, அரசியல்வாதியாக திகழ்ந்தார். அவர் 2005 முதல் 2010 வரை உகாண்டாவில் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்தார். செபானா, உகாண்டாவில் பெரும் செல்வந்தராகவும், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் மிகப்பெரிய சொத்துக்களை வைத்திருந்தார்.
அவர், மகரேரே பல்கலைக்கழகத்தில் (Makerere University) பட்டம் பெற்றார். 1960-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஓரிகோன் பல்கலைகழகத்தில் (University of Oregon) பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் (Master of Arts (MA) degree in Economics) பெற்றார்.
ஜாண் செபானா கிஸிடோவின் அரசியல் வாழ்க்கை, இடி அமீன் ( Idi Amin), மில்டன் ஓபோடே (Milton Obote), தற்போதைய அதிபராக இருக்கும் முசேவெனி (Museveni) ஆகியோருடன் இணைந்து இருந்தது.
1960 ல் அவர் ஒரு தேசிய நிர்வாக அதிகாரி (National Executive Officer) பணியாற்றினார். அவர் 1967 ஆம் ஆண்டு முதல் 1977 வரை கிழக்கு ஆபிரிக்க சமூகத்தின் ஒரு அங்கமான கிழக்கு ஆப்பிரிக்க சட்டமன்ற உறுப்பினராகவும் (East African Legislative Assembly) பணியாற்றினார். 1977 முதல் 1980 வரை அவர் தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் (National Insurance Corporation) தலைவராக பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு, கம்பாலா தெற்கு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament (MP) for Kampala South Constituency) தேர்ந்தெடுக்கப்பட்டார், 90% வாக்குகளைப் பெற்றார். அவர் 1981 ஆம் ஆண்டுவரை 1981 ஆம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை வெளியுறவு அமைச்சராக (Minister of Foreign Affairs) இருந்தார் மற்றும் 1983 இல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக (Acting Leader of the Opposition) செயல்பட்டார்.
அவர் 1985 முதல் 1987 வரை பிராந்திய ஒத்துழைப்பு அமைச்சராகவும் (Minister of Regional Cooperation), 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இருந்து வீட்டுவசதி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகவும் (Minister of Housing and Urban Development) பணியாற்றினார்.
அவர் 1995 ஆம் ஆண்டு உகாண்டா அரசியலமைப்பை (Ugandan Constitution) உருவாக்கிய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மகின்டியே கிழக்கு தொகுதியை (Makindye East Constituency) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1994 முதல் 1995 வரை அவர் தேசிய ஜனநாயகக் கட்சியின் (National Caucus of Democracy) தலைவராக பணியாற்றினார்.
1999 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இருமுறை அவர் கம்பாலாவின் மேயராகத் (Mayor of Kampala) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982 ஆம் ஆண்டில், ஜாண் செபானா கிஸிடோ, ஜோசப் வில்லியம் கிவானுகா (Joseph William Kiwanuka) உடன் இணைந்து, உகாண்டாவின் முதல் தனியார் (அரசு சாரா) காப்பீட்டு நிறுவனமான ஸ்டேட்வைட் இன்சூரன்ஸ் கம்பெனி (Statewide Insurance Company (SWICO)) நிறுவினார். இந்நிறுவனத்தில் செபானா வாரியத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் (Chairman and Managing Director) பணியாற்றினார்.
0 Comments