மன்னராட்சி நடைமுறையில் உள்ள சவூதி அரேபியாவில் இளவரசராக முகம்மது பின் நயீப் அப்துல்யாசிஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், முகம்மது பின் நயீப் அப்துல்யாசிஸ் நீக்கப்பட்டார். முகம்மது பின் நயீப் அப்துல் யாசிசடம் இருந்த அதிகாரங்கள் படிப்படியாக விலக்கப்பட்ட நிலையில், சவூதி மன்னரின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
31 வயதான முகமது பின் சல்மான் துணை பிரதமராகவும் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டத்து இளவரசர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முகம்மது பின் நயீப் அப்துல் யாஸீஸ் உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.