உகாண்டாவில் முதல் முறையாக இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டிய நடன விழா நடைபெறுகிறது. விழாவை “இந்திய உயர் ஆணையம்” (High Commission of India) மற்றும் “இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில்” (Indian Council for Cultural Relations) இணைந்து “உகாண்டா தமிழ் சங்கம்” ஏற்பாடு செய்துள்ளது.

பரதநாட்டிய விழா ஜூன் 28-ம் தேதி இரவு 7 மணி அளவில், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள “கம்பாலா பேரண்ட்ஸ் ஸ்கூல் ஆடிடோரியத்தில்” (Kampala Parents School Auditorium) வைத்து முதல் நாள் நாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் உகாண்டா பிரதம மந்திரி உயர்மிகு. ருஹகனா ருகுண்டா (Hon. Ruhakana Rugunda) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உகாண்டாவிற்கான இந்திய ஹை கமிஷனர் ஸ்ரீ. ரவி சங்கர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்க தலைவர் எம்.எஸ்.சலீம், செயலாளர் ராபி மற்றும் தமிழ் சங்க நிர்வாக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

2-ம் நாள் நடன நாட்டிய நிகழ்வு 29-ம் தேதி இரவு 7 மணி அளவில், ஜிஞ்சா பகுதியில் உள்ள “ககிரா ஆடிட்டோரியத்தில்” (Kakira Auditorium, Jinja) வைத்து நடைபெறுகிறது.

விழா நிகழ்ச்சிகளை உகாண்டா “Tyre Express” மற்றும் “Dunlop” நிறுவனத்தார் வழங்குகின்றனர்.

0 Comments