உகாண்டா முஸ்லிம் சுப்ரீம் கவுன்சில் (Uganda Muslim Supreme Council) தலைவர் ஷேக் யோகா இப்ராஹிம் ககுங்குலு (Sheikh Yahaya Ibrahim Kakungulu) உகாண்டா முஸ்லிம்களுக்கு வானில் தோற்றும் நிலாவை கவனிக்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சனிக்கிழமையன்று மாலை சந்திரன் தென்படவில்லை எனில் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை (2017 ஜூன் 26) கொண்டாடப்படும். சனிக்கிழமை மாலை சந்திரன் தென்பட்டால், ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் கொண்டாடப்படும், என ஷேக் ககுங்குலு தெரிவித்தார். இந்த தகவலை பழைய கம்பாலாவில் உள்ள முஸ்லிம் சுப்ரீம் கவுன்சில் தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், நிலாவை பார்த்தவர்கள் நம்பகமான தகவலை உடனடியாக உகாண்டா முஸ்லிம் சுப்ரீம் கவுன்சில் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.