உகாண்டா தமிழ் சங்கம் 13-வது ஆண்டை அடியெடுத்து வைக்கும் வேளையில், அதன் பொதுக்குழு கூட்டம் நேற்று (30-04-2017) காலை 11.30 மணி அளவில் நடைபெற்றது.
![]() |
| எம்மெஸ் சலீம் |
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சங்க உறுப்பினர் பிரசன்னா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தலைவர் வாஹிது முஹம்மது விடுமுறையில் ஊர் சென்றிருப்பதால், தலைமை உரையினை டிரஸ்டி சாதிக் சாகுல் வழங்கினார். பொது செயலாளர் முகம்மது ராபி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாபு வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார்.
![]() |
| நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் |
புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நியமனம் செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் இளவரசன் சிறப்புரை வழங்கினார். தேர்தல் அதிகாரி அப்துல் கபூர் தேர்தல் குறித்து உரை நிகழ்த்தினார்.
நடப்பு செயற்குழு கலைக்கப்பட்டு, வருகிற 2017 ஆண்டுக்கு நிலைக்கப்படவிருக்கும் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் டிரஸ்டிகளை தேர்வு செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
![]() |
| புதிய தலைவருக்கு வாழ்த்துக்களை வழங்கிய காட்சி |
தேர்தல் ஆணையம் தமிழ் சங்க தேர்தல் குறித்த விதிமுறைகளை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி,
எம்மெஸ் சலீம் - தலைவர்
பாபு - உபத் தலைவர்
முகம்மது ராபி - செயலாளர்
காதிரி - இணைச் செயலாளர் (பண்பாட்டுத்துறை)
ஹேமலதா ஸ்ரீகாந்த் - இணைச் செயலாளர் (விளையாட்டுத்துறை)
காளிதாஸ் - பொருளாளர்)
ரஞ்சனி சதீஷ் - இணை பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்:
சுரேஷ் பாபு, சிவகுமார், சுரேஷ் திருமலை சாமி, இளம்பிரிதி கணேஷ், செய்யது ஆஜி, முகம்மது ராயில், சக்தி வேல், வெங்கட் கிருஷ்ணன், வனிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷபீக்.
நியமன உறுப்பினர்கள்:
இபுராஹீம், சுந்தர், ஜக்பர் சாதிக் மற்றும் செல்வகுமார்
டிரஸ்டிகள்:
ஈஸ்வர், சேகரன் வெள்ளைச்சாமி, சாதிக் சாகுல், வாஹிது முஹம்மது மற்றும் முஹம்மது ரயிசுத்தீன்.
![]() |
| நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் |
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை அனைவரும் வாழ்த்தினர். தொடர்ந்தது பிரசன்னா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் அறுசுவை சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.






0 Comments