உகாண்டாவில் எச்.ஐ.வி நோயின் தாக்கத்தின் விகிதம் சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, ஒவ்வொரு நாளும் சுமார் 50 பெண்கள் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உகாண்டாவில் எச்.ஐ.வின் தாக்கத்தின் மீது அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, UNAIDS (Joint United Nations Programme on HIV/AIDS) இயக்குநர் அமா சாண்டி (Ama Sande) அறிவித்தார்.

புள்ளி விவரப்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 83,000 பேர் புதியதாக எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டும் சுகாதார பணியாளர்களிடம் பதிவு செய்யாமல் உள்ளனர்.

உகாண்டாவில் எச்ஐவி தாக்கத்தின் விகிதம் 7.1% லிருந்து 7.3% விகிதமாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் 15-24 வயதுடைய இளம் பருவத்தினர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இப்பருவத்தினரிடம் இந்நோயின் தாக்கம் 9.1% விகிதமாக உள்ளது.
ஒவ்வொரு நாளும், உகாண்டாவில் உள்ள தெருக்களில் 100 பேரை சந்திக்கும் போது, அவர்களில் 7 பேருக்கு எச்ஐவி உள்ளது. இதில் 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம் 100 பேருக்கு 9 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த நோயின் விகிதம், ஆரம்ப கால திருமணங்கள், வறுமை, குடும்ப வன்முறை, கலாச்சார மனப்பான்மையின்மை போன்ற காரணங்களால் நிச்சயமாக சமூகத்தில் பாலியல் நடவடிக்கை உயர்ந்துள்ளதாக UNAIDS அறிவித்துள்ளது.

உகாண்டாவில் அதிகமாக இலவச செக்ஸ் (Freelance Sex) உள்ளதாக முகநூல் (Facebook) கருத்துக்கள் மூலம் அறியமுடிகிறது. உகாண்டா, இப்போது எச்ஐவியின் தாக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு வாராந்திர நோயின் பாதிப்பு 1,610 ஆகும், அதாவது ஒவ்வொரு நாளும் 230 பேர் எச்ஐவினால் பாதிக்கப்படுகின்றனர்.

உகாண்டாவில் ஒவ்வொரு நாளும் எச்ஐவி தொடர்பான நோயினால் 76 பேர் இறக்க நேரிடுவதாக அதிர்ச்சி தகவலும் அறிய முடிகிறது.