உகாண்டா தலைநகர் கம்பாலா சென்ட்ரல் வணிக மாவட்டத்தில் (Kampala’s Central Business District) நேற்று குடிவரவு அதிகாரிகளால் (Immigration Authorities) செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 36 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகப்படக்கூடிய நபர்கள், நகசெரோ மார்கெட் பகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்தும், கம்பாலாவின் புறநகரான நகவாவில் இருந்தும் கைது செய்யப்பட்டதாக “குடிமக்கள் மற்றும் குடிவரவு ஆணைக்குழு ஆய்வு மற்றும் சட்ட சேவைகள் ஆணையாளர்” (Commissioner Inspection and Legal Services at the Directorate of Citizenship and Immigration) திருமதி. ஜோசபின் எக்வங் அலி (Ms Josephine Ekwang Ali) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா எரித்ரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களில் சிலரிடம் அடையாள ஆவணங்கள் இல்லை, சிலருக்கு குடியுரிமை வசதிகள் காலாவதியாகி விட்டது” என எக்வங் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள், உள்துறை அமைச்சகத்தில் (Ministry of Internal Affairs) உள்ள அலுவலகக்த்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் ஆவணங்கள் சரிபார்த்த பின்பு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் அவர்களின் நாடுகளுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பள்ளி மாணவிகளும் இருந்தனர். அவர்களுடைய குடியுரிமை சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,654 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, அவர்களில் 204 பேர் அவர்களுடைய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 Comments