இந்தியாவும் – உகாண்டாவும் தொழில் பயிற்சி, விண்வெளி திட்டம் மற்றும் அணு சக்தியை அமைதியான முறையில் உபயோகித்தல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது என்று முடிவு செய்துள்ளன. இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்ஸாரி மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி ககுட்டா முசேவெனி (Yoweri Kauta Museveni) இதை கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
உகாண்டா அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான ஸ்டேட் ஹவுஸில் இருவரும் சந்தித்த பிறகு இவ்வாறு அறிவித்தனர். இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இரண்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர், தனது இரண்டாம் கட்ட பயணமாக செவ்வாய்கிழமை உகாண்டா வந்தார்.

கம்பாலா நகரிலிருந்து 80 கி.மீ தூரத்திலிருக்கும் ஜிஞ்சா நகரில் நைல் நதி உற்பத்தியாகும் இடத்திலிருக்கும் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி தனது ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்ஸாரி தாயாகம் திரும்புவார்.