ஆங்கிலத்தில் Grasshopper அழைக்கப்படும் வெட்டுக்கிளி பல ஆயிரம் வகைகளாக உலகெங்கும் காணப்படுகிறது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா மக்கள் பேசும் லுகாண்டா மொழியில் ன்செனெனெ என்று கூறுகிறார்கள்.
வெட்டுக்கிளியின் முட்டை பொரிந்து குஞ்சு வருவதற்கு ஒன்பது மாதங்கள் ஆகும். புல்வெளிகளில் இடப்படும் முட்டையானது மண்ணிற்குள் இயற்கையாக அடைகாக்கப் படுகிறது. முட்டை பொரிந்ததும் அது மண்ணைத் துளைத்துக் கொண்டு வெளி உலகுக்கு வந்து விடுகிறது.

அவை பொதுவாக பறவைகளுக்கும் ஊர்வனற்றிகும் உணவாகும். இவற்றில் ஒருவகை வெட்டுக்கிளி ஆப்ரிகா மற்றும் ஆசியாவிலுள்ள மனிதர்களாலும் உண்ணப்படுகிறது.
உகாண்டாவில் வெட்டுக்கிளி ஏப்ரல், மே மாதங்களில் மிக அதிக அளவில் வருகிறது. இங்குள்ள மக்கள் எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வெட்டுக்கிளியை உகாண்டா மக்கள் இரவில் விளக்கை எரிய விட்டு அந்த வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வரும் வெட்டுக்கிளிகள் வெளிச்சத்தின் மிக அருகில் வந்ததும் வெப்பம் கொண்டு மயங்கி விழுந்ததும் பிடித்துக் கொள்கிறார்கள். பகலில் புல்வெளிகளுக்கு சென்று ஒவ்வொன்றாகவும் பிடிக்கிறார்கள். ஐரோப்பிய சுற்றுலா பயணிகளும் விரும்பி உண்ணுகின்றனர்.

வெட்டுகிளியின் கால்கள் மற்றும் சிறகுகளை அகற்றிவிட்டு வாணலியில் எண்ணை இல்லாமலே சூட்டில் வதக்கும்போது அதிலிருந்து கொழுப்பானது எண்ணைபோ லாகி பொரிந்து உணவாகி விடுகிறது. இதில் மிகஅதிக அளவில் இயற்கை புரோட்டின் சத்து அடங்கி இருக்கிறது.
கிராமப்புறங்களில் அளவுக்கு அதிகமாக இரண்டு மாதங்களில் கிடைக்கும் வெட்டுக்கிளியை அப்படியே வெயிலில் உலர்த்தி சாக்கு மூட்டைகளில் கட்டிவைத்து வெட்டுக்கிளி கிடைக்காத மற்ற மாதங்களில் உணவிற்காக சேமித்து வைத்துக்கொள்கின்றனர். காய்கறி சந்தையில் அதிகமாக கிடைக்கிறது.

தகவல்

ராஜாவாவு பிள்ளை
கம்பாலா, உகாண்டா