ஆதிகாலத்தில் மதங்கள் இல்லாத மனிதர்களாகவே உகாண்டா மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அரசனே ஆளுபவனாகவும் ஆண்டவனாகவும் கொண்டாடப் பட்டான். அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் அரசனே அதிபதியாகவும் இருந்தான்.
18-ம் நூற்றாண்டின் மத்தியில் அரேபியர்கள் வியாபார நிமித்தம் வந்தபோது இசுலாமிய மார்க்கம் வேர்விடத்துவங்கியது. ஐரோப்பியர்கள் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வர ஆரம்பித்தார்கள். அப்போது புகாண்டாவின் அரசனும் கூட இசுலாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவராகவே இருந்தார்.
வெள்ளையர்கள் வரும்போதே துப்பாக்கியையும் பைபிளையும் கூடவே கொண்டுவந்தனர். அதன் தாக்கமும் ஊடுருவல் யுக்திகளும் முழுப்பரிணாம வளர்ச்சிக்கான ஆவனவும் இப்போதும் நடந்து வருகிறது. இப்போதைய உகாண்டாவில் மக்கள்தொகையில் தோராயமாக 30% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முன்னால் வாழ்நாள் அதிபர் ஈத் அமீன் காலத்தில் ஐக்கிய முஸ்லிம் நாடுகள் சபையில் முழு அங்கத்தினராக சேர்க்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.

ஷரியா வங்கியும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதும் கூடுதலான தகவல். உகாண்டாவில் சிறுசிறு கிராமங்களிலும் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு பள்ளிவாசல்களை கட்டி பராமரித்து உபயோகித்தும் வருகிறார்கள்.


தகவல்

ராஜா வாவுபிள்ளை
கம்பாலா, உகாண்டா