விஜய் நடித்துள்ள “பைரவா” படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. உலக மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பைரவா படத்தை 55 நாடுகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளது படத்தை வெளியிடும் ஏ அண்ட் பி நிறுவனம்.
குறிப்பாக முதல்முறையாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, தான்சான்யா, போட்ஸ்வனா, காங்கோ ஆகிய நாடுகளிலும் வெளியிடுகிறது.
அதன்படி உகாண்டாவில் ஜனவரி 14 சனிக்கிழமை “பைரவா” வெளியாகிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புகழ்பெற்ற அகாசியா மால் (Acacia Mall, Kampala, Uganda) திரையரங்கில் திரையிடப்படுகிறது. சனிக்கிழமை இரவு 7 மணி காட்சியிலும், ஞாயிற்று கிழமை மதியம் 2.30 மணி காட்சியிலும் இப்படத்தை காணலாம். இதற்கான முன்பதிவு 12-ம் தேதி முதல் துவங்குகிறது.