உலகமெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகத்துடன் கொண்டாடும் மிகமுக்கிய பண்டிகை பொங்கல். தை திங்கள் முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து உழவர் தினம், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி உகாண்டா வாழ் தமிழர்களால் ஜனவரி 22-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று சிறப்புடன் கொண்டாடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருநாள் நிகழ்வுகளை உகாண்டா தமிழ் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் உகாண்டா தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் ரிசார்ட் (Forest Park Resort) பகுதியில் வைத்து நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வடம் இழுத்தல், பானை உடைத்தல், ஜல்லிக்கட்டு முதலிய போட்டிகள் நடைபெறுகிறது. உகாண்டாவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்துடன் கூடிய அறுசுவை உணவு விருந்து பரிமாறப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் இல்லை. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உகாண்டா தமிழ் சங்கத் தலைவர் வாஹித் முஹம்மத் மற்றும் அதன் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.