உகாண்டா பராரா (Mbarara) பகுதயில் (பராரா – இபண்டா நெடுஞ்சாலை, Mbarara- Ibanda Highway) உள்ள கடேபியில் (Katebe) கடந்த ஞாயிற்று கிழமை (15-ம் தேதி) அதிகாலை 3 மணி அளவில் பயங்கர வாகன விபத்து நடந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள், 30 பேர் கடுமையான காயத்தால் பாதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தில் 60 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிகிறது. மிக வேகமாக சென்ற வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளாகியதாக தெரிகிறது.

கிவிரி லியோனிடா (Kiviri Leonida, 43), நஹாப்வே (Nahabwe, 28) மற்றும் அசிம்வே (Asiimwe) ஆகியோர் விபத்தில் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் பராராவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு (Mbarara Regional Hospital) கொண்டு செல்லப்பட்டனர். சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.