தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் கொண்டு வந்தது.
ஆனால், ஜல்லிக்காட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழர்கள், அவசர சட்டம் வேண்டாம் நிரந்தர சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நேற்று (22-01-2017) நடைபெற்றது.
இப்போராட்டம் உகாண்டா தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் ரிஸார்ட் (Forest Park Resort) பகுதியில் வைத்து நடந்தது. போராட்டத்திற்கு உகாண்டா தமிழ் சங்கத்தலைவர் முஹம்மத் வாஹித் தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கான உகாண்டா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், தடைக்கு காரணமான பீட்டாவை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு போராட்ட வீடியோ காட்சி