உகாண்டா தலைநகர் கம்பாலாவில், தமிழர் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா நேற்று (22-01-2017) நடைபெற்றது. விழாவில் உகாண்டா வாழ் தமிழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணி அளவில் பொங்கல் வைக்கப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக பிரத்யோகமாக காளை கொண்டுவரப்பட்டு இருந்தது. காளையை வீரத்தமிழர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.

மேலும், பானை உடைத்தல் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றன. மதியம் 1 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

தொடர்ந்து கபடி போட்டியும், சிலம்பாட்ட போட்டியும் நடைபெற்றன. மாலை 5 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


0 Comments