உகாண்டாவுக்கும் காங்கோவிற்கும் நடுவே கடல்போல் கிடக்கும் ஆல்பர்ட் ஏரி (Lake Albert) ஆப்ரிக்காவின் ஏழாவது பெரிய ஏரியாகவும் உலகில் இருப்பத்தியேழாவது பெரிய ஏரியாகவும் இருக்குறது. 1867-ல் சாமுவேல் பேக்கர் எனும் ஆங்கிலேயர் முதல்முதலாக இந்த ஏரியை கண்டுபிடித்தார். அப்போதைய இங்கிலாந்து இளவரசரின் பெயரையும் சூட்டினார்.
நீர்வழி போக்குவரத்து (Ferry) உகாண்டாவில் சில ஊர்களுக்கிடையேயும் கிழக்கு காங்கோவுக்கும் நடைபெறுகிறது. இயற்கையால் அமைக்கப்பட்ட ஒரு அணைக்கட்டு (reservoir) போல் நைல்நதியின் என்றும் வற்றாத வளத்திற்கு துணை நிற்கிறது. ஆல்பர்ட் ஏரி நிறைந்து ஒழுகும் நீரோட்டம் ஆல்பர்ட் நைல் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் தாய் நதியான நைல் நதியில் இணைந்து கொள்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் ஆல்பர்ட் ஏரியின் கரையோரங்களில் உயர்தரமான எண்ணை வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இப்போது எண்ணை எடுக்கும் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. எண்ணை விலையின் வீழ்ச்சியும் வல்லரசுகளின் போட்டியும் எண்ணை அரசியலும் இங்கும் இருக்கவே செய்கிறது.
எண்ணெய் உற்பத்திக்கான ஆயத்த பணிகள்
காலாகாலமாக இயற்கை தனது தனித்தன்மையை ஆழமான ஏரியில் அதன் கரையில் அடர்ந்த வனத்திலும் வனவாசிகளும் மலைகளிலும் கட்டிக்காத்து வந்துள்ளது. இப்போது எண்ணெய் தாகம் கொண்ட 'நாகரீக' மனிதன் பேராசை கொண்டு வந்துவிட்டான். இயற்கை ஒருநாளும் இறக்காது ! ஆனால் அவனை வாழவைக்கும் இயற்கையை சுயலாபத்திற்காக அழித்தொழிக்கும் மனிதன் இருப்பானா? அந்த இயற்கைதான் பதில் சொல்லவேண்டும்.


தகவல் 

ராஜாவாவு பிள்ளை 
கம்பாலா, 
உகாண்டா.